Wednesday, November 19, 2008

நம்பியாருக்கு அஞ்சலி

சென்னையில் நேற்று மரணமடைந்த பழம்பெரும் நடிகர் எம்.என். நம்பியாரின் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது. எம்.என்.நம்பியார் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். நம்பியாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, அவருடைய வீட்டில் வைக்கப்பட்டது.


Monday, November 3, 2008

ஏகன் முதலிடமாம் .... தமிழன் திருந்த இடம் இல்லை

ஏகன் முதலிடமாம் .... தமிழன் திருந்த இடம் இல்லை தமிழ் நாட்டு தமிழன் என்னதான் செய்தாலும் திருந்துவதாய் தெரியவில்லை ... அட்லீஸ்ட் ஈழ தமிழனவது அஜித்க்கு பாடம் புகட்ட வேண்டும்

See this news:


கவிதை நல்லாய் உள்ளது கருணாநிதி! ஆனால், கண்ணீர் உண்மையாய் இல்லை

வெந்தணலில் கிடக்கின்ற ஈழத் தமிழருக்கு இதயத்தைத் தந்திடுவோம், தேவையெனில் இன்னுயிரையும் வழங்கிடுவோம் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

முரசொலியில் அவர் எழுதியுள்ள கவிதையில்,

இலங்கைப் போரிலே செத்து மடியும் தமிழரெல்லாம் இந்தியா கை கொடுக்கும் என்று நம்பித் தான் இமை மூடுகின்றார்.

உதவிக்கு நமை நாடுகின்ற அவர் தம் இல்லங்களில் உதிர்ந்து விட்ட இலைகளுக்குப் பின் இருக்கின்ற அரும்புகளைக்

கருகாமல் காய்ந்திடாமல் காத்து வளர்த்து காலத் தருவாய் இருந்த தமிழினமே தரை மட்டமானது எனும் வரலாறுக்கு இங்குள்ள தமிழர் வழித் தோன்றல்களாகி விடாமல்;

வளர் பிறைகள் தேய்பிறைகளாகி நிரந்தர அமாவாசை நிலைத்துவிடாமல்

இடர் களைந்து இன்றே இலங்கைத் தமிழர்தம் உயிர் காத்து இனம் காத்தோம் எனும் பெருமூச்செறிந்திட வழி கண்டு

இங்குள்ள நல்லோர் தரும் நன்கொடையாம் பரிவுத் தொகைகளை "இதயமுள்ளோர் வாழ்க'' என்று இனிய நன்றி கூறிப் பெற்றுக் கொண்டு

அவற்றையெல்லாம் பண்டங்களாக்கி உணவு உடை பொருள்களாக்கி அங்குள்ள உரியவர்க்குப் போய்க் கிட்டிட உகந்த வழி உடனே கண்டு

சர்வ தேச அமைப்புகள் மூலமாக அனுப்பி வைக்கவிருக்கின்றோம்-

அது போய்ச் சேராது என்றும் அது ஓர் நாடகமென்றும் அவசரக்கார தம்பி ஒருவரும் அவையெலாம் வீணாக விடுதலைப் புலிகட்கே பயன்படுமென்று அம்மையார் ஒருவரும்

அதனால் நிதி கொடுக்காதீர்- இலங்கைத் தமிழரை வாழ வைக்காதீர் என்று வெறிக் கூச்சல் போடுகின்றார்- அவற்றை நாம் பொருட்படுத்தாமல்

வெற்றுக் கூச்சல் என்றே எண்ணிக்கொண்டு இன்னும் வேகமாக வெந்தணலில் கிடக்கின்ற ஈழத் தமிழருக்கு இதயத்தைத் தந்திடுவோம்- தேவையெனில் இன்னுயிரையும் வழங்கிடுவோம்!

இவ்வாறு தனது கவிதையில் கூறியுள்ளார் கருணாநிதி.

Sunday, November 2, 2008

உண்ணாவிரத (நடிப்பு) துளிகள்

* நடிகர்களில் பெரும்பாலானவர்கள் கறுப்பு சட்டை அணிந்து வந்திருக்க, பிரசாந்த் மட்டும் வித்தியாசமாக ரோஸ் கலர் சட்டையில் பளபளத்தார்.

* காலை 11.20 மணிக்கு நடிகர் விஜயகாந்த் தனது கட்சி நிர்வாகிகளுடன் மேடைக்கு வந்து முன்வரிசையில் அமர்ந்தார். அவர் அமர்ந்தவுடன், அதுவரை இடத்தைப் பிடித்து வைத்திருந்த கட்சி நிர்வாகிகள் மேடையில் இருந்து இறங்கினர்.

* விஜயகாந்தை தொடர்ந்து 10 நிமிட இடைவெளியில் ரஜினி மேடைக்கு வந்தார். கறுப்பு நிற சட்டையில் ரஜினி வந்த போது, விசில் பறந்தது. தனது "ஸ்டைலில்' ஒரு கும்பிடு போட்டு விட்டு அமர்ந்து, பேச்சாளர்கள் பேசுவதை சீரியசாக கவனித்தார்.

* ரஜினி பேசி முடித்ததும் கூட்டம் கலைய ஆரம்பித்தது. "எட்டு மணி நேரம் உட்கார்ந்த நீங்க இன்னும் 10 நிமிடம் கூட காத்திருக்க மாட்டீர் களா? அப்புறம் எப்படி ஈழம் கிடைக்கும்' என்று ராதாரவி ஆவேசப்பட்டார்.

* நடிகர் அஜீத் வந்த போது, முன்வரிசையில் அமர்ந்திருந்த விஜய் எழுந்து நின்று கை கொடுத்தார். அதை போட்டோகிராபர்கள் படம் எடுப்பதற்காக குரல் கொடுத்தனர். இதனால் ராதாரவி டென்ஷனானார். "இது ஸ்டார் நைட் அல்ல; நடிகர்கள் போய் உட்காருங்கள்' என ஆவேசத்துடன் கூறினார். இதனால் அஜீத், விஜய் இருவரும் "அப்செட்' ஆகினர்.

* மேடையில் ஓர் ஓரத்தில் காமெடி நடிகர் மயில்சாமியின் அருகில் அஜீத் அமர்ந்தார். இதனால், மேடையில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேர இடைவெளியில் ராதாரவி அமைதியாகி, அஜீத்தை முன்வரிசையில் அமர வைத்தார்.

* உண்ணாவிரத நிகழ்ச்சியில் குஷ்பு, சினேகா, லதா, ஸ்ரீபிரியா உள்ளிட்ட நடிகைள் முழுமையாக பங்கு கொள்ளாமல், பாதியில் புறப்பட்டுச் சென்றனர்.

* கமல், ரஜினி, ஜெயராம், பிரபு போன்ற சில நடிகர்கள் தாமதமாக வந்தனர். நடிகர் பிரகாஷ்ராஜ் உண்ணாவிரதம் ஆரம்பிக்கும் முன்பே வந்திருந்தார்; பாதியில் காரில் ஏறி பறந்தார்

* உண்ணாவிரதம் மேற்கொண்ட நடிகைகளை பார்க்க கூட்டம் திரண்டிருந்தது. மேடையில் உள்ள நடிகைகளைப் பொதுமக்கள் வரிசையாக சென்று பார்க்க வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

Saturday, November 1, 2008

அஜித் உண்மை வேஷம்

தயவு செய்து இந்த வீடியோ பார்க்கவும்
http://www.youtube.com/watch?v=-aF0pj46hZU
சினிமா ஸ்டார் எல்லாம் நடிப்பு , இனி என்றாலும் தலை தலை... என்று உங்கள் தலையில் கல்லை மோதி கொள்ள வேண்டாம் Pls.....

Please try to understand mentality of ajith. I donot understand why these actors made big drama today and luckly, Ajith could not act infront of mic and told the turth and shown his mentality. Now every one should understand and donot go behind these actors and do not consider them as role model.. Reject Ajith at least now if you are considering you are true tamilan.

Thanks

Friday, October 31, 2008

சரத்குமார், ஏன் இந்த நாடகம்?

ஏன் இந்த நாடகம்? 

இலங்கை தமிழர்களுக்கு தெரியும் உண்மையான ஆதரவு யார்? நடிப்பது யார் என்று ?

------------------------------------------------------------------------------------------------------------------------------

நவம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் நடிகர்கள் பேசுவதற்கு கட்டுப்பாடு விதித்திருக்கிறது நடிகர் ச‌ங்கம்.


இல‌ங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், அதனை நிறுத்த கோ‌ரியும் ராமேஸ்வரத்தில் திரையுலகினர் பேரணியும், பொதுக் கூட்டமும் நடத்தினர். ராமேஸ்வரம் அதிக தூரம் என்று கூறிய நடிகர் ச‌ங்கம் நவ. ஓன்றாம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தது.

இந்நிலையில் ராமேஸ்வரம் பொதுக் கூட்டத்தில் இயக்குனர்கள் சீமான், அமீர் இருவரும் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகக் கூறி தமிழக அரசு அவர்களை சிறையிலடைத்தது. மேலும் மத்திய அரசை தமிழக அரசு எவ்விதத்திலும் நிர்ப்பந்திக்காது என்று கூறி தமிழ் உணர்வை முற்றிலுமாக தமிழக அரசு கைகழுவியிருக்கிறது.

உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள நடிகர், நடிகைகளுக்கு அழைப்பிதழ் அனுப்பியிருக்கும் நடிகர் ச‌ங்க‌த் தலைவர் சரத்குமார், உண்ணாவிரதத்தின் போது தமிழக, மத்திய மற்றும் இல‌‌ங்கை அரசுகளுக்கு எதிராகவோ, சட்டவிரோதமாகவோ, யார் மனதும் புண்படும்படியோ பேச வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். த‌ங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் கருத்துக்களை மட்டும் பதிவு செய்தால் போதும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

திரையில் உலகை காப்பாற்றும் ஹீரோக்களின் நிஜ முகத்தை வெளிப்படுத்தியதற்கு சரத்குமாரை எத்தனை பாராட்டினாலும் தகும்

Wednesday, October 15, 2008

பார்க்க போனால் ஜெயலலிதா பதவியை பிடிபதில் தான் குறியாய் உள்ளார்...

இலங்கைப் பிரச்னை தொடர்பாக இரண்டு வார காலத்திற்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக எம்.பி.,க்கள் பதவி விலகுவார்கள் என்ற தீர்மானம் வெறும் கண்துடைப்பு நாடகம் என அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:

அனைத்து கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்தும் அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை. அவ்வாறு செய்தால் இந்திய உள் நாட்டு விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிட வழிவகை செய்தது போல் ஆகிவிடும், இது நாட்டின் இறையாண்மையை குலைக்கும்.

இந்த அடிப்படை கூட தெரியாமல் ஒருவர் 5 முறை முதல்வர் பதவியில் இருந்துள்ளார் என்பது ஆச்சரியமாக உள்ளது.

இலங்கை ராணுவத்துக்கு இந்திய ராணுவம் பயற்சி அளிப்பதும், அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது நடைபெறும் ராணுவத் தாக்குதலும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பது தான் முக்கியமான பிரச்னை. 

இலங்கையில் தற்போது நடைபெறும் யுத்தத்தில் அப்பாவித் தமிழர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதை விடுதலைப் புலிகள் தடை செய்யக்கூடாது என்று கருணாநிதி ஏன் வலியுறுத்தவில்லை. 

மத்திய அரசுக்கு இரண்டு வார கால அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பது காலம் கடத்தும் முயற்சி. இலங்கைத் தமிழர்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும். மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை தமிழக மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் திமுகவும் தனது ஆட்சி அதிகாரத்தை துறக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்