* நடிகர்களில் பெரும்பாலானவர்கள் கறுப்பு சட்டை அணிந்து வந்திருக்க, பிரசாந்த் மட்டும் வித்தியாசமாக ரோஸ் கலர் சட்டையில் பளபளத்தார்.
* காலை 11.20 மணிக்கு நடிகர் விஜயகாந்த் தனது கட்சி நிர்வாகிகளுடன் மேடைக்கு வந்து முன்வரிசையில் அமர்ந்தார். அவர் அமர்ந்தவுடன், அதுவரை இடத்தைப் பிடித்து வைத்திருந்த கட்சி நிர்வாகிகள் மேடையில் இருந்து இறங்கினர்.
* விஜயகாந்தை தொடர்ந்து 10 நிமிட இடைவெளியில் ரஜினி மேடைக்கு வந்தார். கறுப்பு நிற சட்டையில் ரஜினி வந்த போது, விசில் பறந்தது. தனது "ஸ்டைலில்' ஒரு கும்பிடு போட்டு விட்டு அமர்ந்து, பேச்சாளர்கள் பேசுவதை சீரியசாக கவனித்தார்.
* ரஜினி பேசி முடித்ததும் கூட்டம் கலைய ஆரம்பித்தது. "எட்டு மணி நேரம் உட்கார்ந்த நீங்க இன்னும் 10 நிமிடம் கூட காத்திருக்க மாட்டீர் களா? அப்புறம் எப்படி ஈழம் கிடைக்கும்' என்று ராதாரவி ஆவேசப்பட்டார்.
* நடிகர் அஜீத் வந்த போது, முன்வரிசையில் அமர்ந்திருந்த விஜய் எழுந்து நின்று கை கொடுத்தார். அதை போட்டோகிராபர்கள் படம் எடுப்பதற்காக குரல் கொடுத்தனர். இதனால் ராதாரவி டென்ஷனானார். "இது ஸ்டார் நைட் அல்ல; நடிகர்கள் போய் உட்காருங்கள்' என ஆவேசத்துடன் கூறினார். இதனால் அஜீத், விஜய் இருவரும் "அப்செட்' ஆகினர்.
* மேடையில் ஓர் ஓரத்தில் காமெடி நடிகர் மயில்சாமியின் அருகில் அஜீத் அமர்ந்தார். இதனால், மேடையில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேர இடைவெளியில் ராதாரவி அமைதியாகி, அஜீத்தை முன்வரிசையில் அமர வைத்தார்.
* உண்ணாவிரத நிகழ்ச்சியில் குஷ்பு, சினேகா, லதா, ஸ்ரீபிரியா உள்ளிட்ட நடிகைள் முழுமையாக பங்கு கொள்ளாமல், பாதியில் புறப்பட்டுச் சென்றனர்.
* கமல், ரஜினி, ஜெயராம், பிரபு போன்ற சில நடிகர்கள் தாமதமாக வந்தனர். நடிகர் பிரகாஷ்ராஜ் உண்ணாவிரதம் ஆரம்பிக்கும் முன்பே வந்திருந்தார்; பாதியில் காரில் ஏறி பறந்தார்
* உண்ணாவிரதம் மேற்கொண்ட நடிகைகளை பார்க்க கூட்டம் திரண்டிருந்தது. மேடையில் உள்ள நடிகைகளைப் பொதுமக்கள் வரிசையாக சென்று பார்க்க வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
No comments:
Post a Comment