Thursday, October 2, 2008

அஞ்சலி - பூர்ணம் விஸ்வநாதன்

சென்னையில் நேற்று ரணம் அடைந்த நடிகர் பூர்ணம் விஸ்வநாதனின் உடல் தகனம் இன்று நடந்தது. அவரது உடலுக்கு ஏராளமான நடிகர் நடிகைகள் அஞ்சலி செலுத்தினர். பழம்பெரும் நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 87.

உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூர்ணம் விஸ்வநாதன், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.  கோட்டூர்புரத்தில் உள்ள அவரது மகன் வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு பொது மக்கள் மற்றும் நடிகர் சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் ராதாரவி மற்றும் நடிகர்கள் ராஜேஷ்,ஒய்.ஜி.மகேந்திரன்,எஸ்.வி.சேகர், காத்தாடிராமமூர்த்தி,டைரக் டர் பாலச்சந்தர் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். 

அதனைத் தொடர்ந்து பூர்ணம்விஸ்வநாதன் உடல் இன்று பகல் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மயிலாப்பூரில் உள்ள மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மரணம் அடைந்த பூர்ணம்விஸ்வநாதனுக்கு சுசிலா என்ற மனைவியும், சித்தார்த் என்ற மகனும் உமா, பத்மினி ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர்.

பூர்ணம் விஸ்வநாதன் வறுமையின் நிறம் சிவப்பு, தில்லுமுல்லு,ஆண்பாவம், வருஷம்16, ஆசை, மகாநதி உள்பட 80 படங்களில் நடித்துள்ளார். 

சினிமாவுக்கு வரும்முன் டெல்லியில் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். இந்தியா சுதந்திரம் அடைந்த செய் தியை வானொலியில் அறிவித்த பெருமை இவருக்கு உண்டு. 

No comments: