Tuesday, September 30, 2008

கவலையான செய்தி

ஏன் இந்த வம்பு? அரசியல் ஒன்றும் நாடக மேடை இல்லை. படித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் தான் தமிழ் நாடுக்கு விடிவு உண்டு.

இந்த செய்தி படிக்க, கவலையாக உள்ளது: ......................................-- >


அரசியலில் நுழைவது தொடர்பாக தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெளிவான பதிலை அளிக்க வேண்டும் என்று அவரின் ரசிகர்கள், ரசிகர் மன்றத் தலைவர் சத்ய நாராயணாவின் வீட்டைக் கடந்த 2 நாட்களாக முற்றுகையிட்டு போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

இதனையடுத்து 'எந்திரன்' முதல்கட்ட படப்பிடிப்பை வெளிநாட்டில் முடித்துக்கொண்டு சென்னை திரும்பியுள்ள ரஜினிகாந்த் விரைவில் ரசிகர்களைச் சந்தித்து அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் திரையுலகில் முடிசூடா மன்னனாகத் திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வர மாட்டாரா? என்பது கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், தமிழக மக்கள் மத்தியிலும் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்து வருகிறது. கடந்த 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் ரஜினியின் வாய்ஸ் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது.

ஆனால் அதன் பின்பு நடந்த தேர்தல்களில் அவரது வாய்ஸுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. எனினும் திரைப்படங்களில் அரசியலுக்கு வருவது குறித்து பஞ்ச் டயலாக்குகள் மூலம் அவர் ரசிகர்களிடையே அவ்வப்போது உற்சாகத்தை ஏற்படுத்தி வந்தார். ரஜினியின் படங்கள் ரிலீசாகும் ஒவ்வொரு முறையும் இந்த எதிர்பார்ப்பு பன்மடங்காக அதிகரிப்பது வழக்கம். ஆனால் ஒவ்வொரு முறையும் மவுனத்தையே தனது பதிலாக அளித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி வந்தார்.

இதற்கிடையில் விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் என நடிகர்கள் சொந்தக் கட்சிகளை ஆரம்பித்து விட்டனர். அதிலும் விஜயகாந்த் கட்சி, திமுக -அதிமுகவுக்கு மாற்றாக வளர்ந்து வரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில், ரஜினிகாந்தின் லட்சக்கணக்கான ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். பல பகுதிகளில் ரசிகர்கள் ரஜினி இனி மேல் அரசியலுக்கு வர மாட்டார் என்று கருதி விஜயகாந்தின் தேமுதிகவில் சேர்ந்து, பதவிகளையும் வாங்கிவிட்டனர்.

இதற்கிடையே அண்மையில் வெளி வந்த 'குசேலன்' திரைப்படத்தில், வசனகர்த்தாக்கள் எழுதிக் கொடுக்கும் வசனத்தை நான் பேசினால் அதை உண்மை என்று கருதி விடுவதா என ரஜினி பேசிய வசனம் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது.

இதை அறிந்த ரஜினி அந்த வசனத்தையே படத்தில் இருந்து எடுத்துவிட்டார். எனினும் கோபம் குறையாத ரஜினி ரசிகர்கள், ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணாவுக்கு, ரஜினி தங்களைச் சந்திக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் 'எந்திரன்' படப்பிடிப்பிற்காக ரஜினி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார். படப்பிடிப்பை முடித்துக்கொண்டு செப்.28 அன்று ரஜினி சென்னை திரும்பினார். அவர் சென்னை வந்த விஷயத்தை அறிந்த ரசிகர்கள் கடந்த 2 நாட்களாக ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணா வீட்டை முற்றுகையிட்டு வருகின்றனர்.

ரஜினிகாந்த் எப்போது தங்களைச் சந்திக்கிறார் என்பதை அறிந்து கொள்ளவும், அரசியல் பற்றி அவரது முடிவு என்ன என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் முனைப்பு காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இனியும் கால தாமதம் செய்யாமல் ஏதாவது ஒரு முடிவை ரஜினி அறிவித்தே ஆக வேண்டும் என்று அவர்கள் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அக்டோபர் 3 அல்லது 9ஆம் தேதி கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்த் ரசிகர்களைச் சந்திப்பார் எனக் கூறப்படுகிறது. சந்திப்பின் நோக்கம் என்ன? அரசியல் குறித்து அறிவிப்பாரா? அல்லது சமுதாய நல இயக்கம் எதையும் ஆரம்பிப்பாரா? அல்லது அரசியல் கட்சி எதற்காவது ஆதரவு தெரிவிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.

இதற்கிடையில் சென்னை திரும்பிய ரஜினி சமீபத்தில் வெளியான லயோலா கருத்துக் கணிப்பு முடிவுகள் பற்றிய செய்திகளைக் கூர்ந்து படித்தாராம். மேலும் தன் மகள் சவுந்தர்யாவுடன் கேளம்பாக்கம் வீட்டில் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ரசிகர்கள் இடையிலும், தமிழக மக்களிடையிலும் சரிந்த தனது செல்வாக்கை மீண்டும் அதிகரிக்க உறுதியான முடிவை அவர் எடுக்க வேண்டும் என்று அவருக்கு நெருங்கியவர்களும் கூறியிருப்பதாகத் தெரிகிறது.

அண்டை மாநிலமான ஆந்திராவில் புதிய கட்சி துவக்கிய சிரஞ்சீவி, தமிழ்நாட்டில் ரஜினிக்கான அரசியல் வாய்ப்பு அப்படியே இருப்பதாக சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது. எனவே 2008 அக்டோபர் முதல் வாரம் ரஜினி ரசிகர்களைச் சந்திக்கும் பட்சத்தில் அவர் அதிரடியான முடிவை அறிவிக்கக்கூடும் என்றும் அதன் மூலம் அரசியலில் பரபரப்பு திருப்பம் ஏற்படலாம் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

ரம்ஜான் திருநாள் வாழ்த்துகள்

எனது ரம்ஜான் திருநாள் வாழ்த்துகள்.
இதோ தமிழ் நாடு முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் வாழ்த்து:

இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவர் வாழ்விலும் எல்லா வளங்களும் நிறைந்திட தமது இதயம் கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.

நாடெங்கும் அக்டோபர் 1 அன்று ரம்ஜான் திருநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமிய பெருமக்களுக்கு முதலமைச்சர் கருணாநிதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கி வலிமை சேர்த்திடும் ஒரு மாத கால கடுமையான நோன்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்து ரம்ஜான் திருநாள் கொண்டாடும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் தமது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் நிறைந்த மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மனித சமுதாய முன்னேற்றத்திற்கு, நல்வாழ்க்கைக்கு இஸ்லாமிய நெறிகள் உயர்ந்த வழிமுறைகளைக் காட்டியிருப்பதாகத் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் புகழ்ந்துரைத்திருப்பதாக தமது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ள முதலமைச்சர், இந்த அரசு தொடர்ந்து 1969ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய சமுதாய மக்களின் மேம்பாட்டிற்கு வழங்கியுள்ள சலுகைகளைப் பட்டியலிட்டுள்ளார்.

1969இல் மிலாது நபி தினத்திற்கு அரசு விடுமுறை வழங்கியது. 1989இல் சிறுபான்மையினர் ஆணையம் அமைத்தது. 2000இல் உருது அகாடமி தொடங்கப்பட்டது. கடந்த 2007ஆம் ஆண்டு இஸ்லாமியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கியது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கியிருப்பதாக முதலமைச்சர் தமது ரம்ஜான் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Saturday, September 27, 2008

மன்னிக்கவும்.

மன்னிக்கவும். என்னால் தமிழ் எழுது தவறுகளை தவீர்க முடியாவேல்லை. கூகிள் தமிழ் இன்னமும் இந்த குழந்தைக்கு தெரியவில்லை. கொஞ்ச காலம் காத்து இருக்கவும்.  நன்றி 

விளங்குவது எப்படி?

தமிழா, இன்று பெரும்பாலான தமிழர் தங்கள் தமிழை மறக்கவில்லை என்று காட்டி கொள்ள விரும்புகீரர்கள்.  அதில் நாங்கள் சந்தோசம் அடையலாம். 

எங்களிடம் பல வகையான தமிழ் உள்ளது. முக்கியமாக தமிழ் கதைப்பது. நான் தமிழ் நாடு சென்றபோது நான் கதைப்பது ராஜப்பட்டை ஹோட்டல் பணி புரிபவர்கள் விளங்கவில்லை. நான் கதைப்பது அவர்களுகு புரியவில்லை. இந்த கூகிள் ற்றன்ச்ளிடேரடின் செய்வது போல்.

ஆனால் எப்படி தமிழ் சினிமா படங்கள் மட்டும் எல்லாருக்கும் விளங்குவது. எப்படி?

Friday, September 26, 2008

ஒரு குழந்தை வணக்கம்

நன்றாக தமிழ் கதைத்து, கவிதை, கட்டுரை, சிறுகவிதை என எழுதி பரிசில்கள் வாங்கிய எனக்கு, பல்லாண்டுகள் எல்லாம் மறந்து கிடந்த என் வாழ்கையில் இந்த புதிய ஆசை. நிட்சயமாக நல்ல பல ஆக்கங்களை விரைவில் தருவேன்.