Tuesday, September 30, 2008

ரம்ஜான் திருநாள் வாழ்த்துகள்

எனது ரம்ஜான் திருநாள் வாழ்த்துகள்.
இதோ தமிழ் நாடு முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் வாழ்த்து:

இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவர் வாழ்விலும் எல்லா வளங்களும் நிறைந்திட தமது இதயம் கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.

நாடெங்கும் அக்டோபர் 1 அன்று ரம்ஜான் திருநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமிய பெருமக்களுக்கு முதலமைச்சர் கருணாநிதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கி வலிமை சேர்த்திடும் ஒரு மாத கால கடுமையான நோன்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்து ரம்ஜான் திருநாள் கொண்டாடும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் தமது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் நிறைந்த மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மனித சமுதாய முன்னேற்றத்திற்கு, நல்வாழ்க்கைக்கு இஸ்லாமிய நெறிகள் உயர்ந்த வழிமுறைகளைக் காட்டியிருப்பதாகத் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் புகழ்ந்துரைத்திருப்பதாக தமது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ள முதலமைச்சர், இந்த அரசு தொடர்ந்து 1969ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய சமுதாய மக்களின் மேம்பாட்டிற்கு வழங்கியுள்ள சலுகைகளைப் பட்டியலிட்டுள்ளார்.

1969இல் மிலாது நபி தினத்திற்கு அரசு விடுமுறை வழங்கியது. 1989இல் சிறுபான்மையினர் ஆணையம் அமைத்தது. 2000இல் உருது அகாடமி தொடங்கப்பட்டது. கடந்த 2007ஆம் ஆண்டு இஸ்லாமியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கியது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கியிருப்பதாக முதலமைச்சர் தமது ரம்ஜான் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

No comments: